சீவக சிந்தாமணி 3086 - 3090 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3086 - 3090 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3086. குளித்து எழு வயிர முத்தத் தொத்து எரி கொண்டு மின்ன
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு
வளிப் பொர உளரும் திங்கள் கதிர் எனக் கவரி பொங்கத்
தெளித்து வில் உமிழும் செம் பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே

விளக்கவுரை :

3087. மணியரும் பதம்
மணி உமிழ் திருக் கேசம் வானவர் அகில் புகையும்
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓடக் கமழுமால்
துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
அணிதிகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ

விளக்கவுரை :

[ads-post]

3088. முழங்கு திரு மணிமுறுவல் முருக்கு இதழ் கொடிப் பவழத்து
தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம்
வழங்கு பொன் வரை வளரும் பைங்கண் மா உரையாதோ

விளக்கவுரை :

3089. உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
குறைத்து அடுக்கிக் குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால்
வெறுத்து இரு வினை உதிர்த்தாற்கு அது வண்ணம் விளம்பலாம்
கறுப்பு ஒழிந்த கனை எரிவாய்க் கார் இரும்பே கரி அன்றே

விளக்கவுரை :

3090. வானோர் ஏந்து மலர் மாரி வண்ணச் சாந்தம் பூஞ்சுண்ணம்
கான் ஆர் பிண்டிக் கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும்
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்பத் திகைகள் மணம் நாறி
ஆனா கமழும் திருவடிப் போது அமரர் முடி மேல் அணிந்தாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books