சீவக சிந்தாமணி 2686 - 2690 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2686 - 2690 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2686. செந் நெருப்பு உணும் செவ் எலி மயிர்
அந் நெருப்பு அளவு ஆய் பொன் கம்பலம்
மன்னர் உய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே

விளக்கவுரை :

2687. ஆடல் இன் சுவை அமர்ந்து நாள் தொறும்
பாடல் மெய்ந் நிறீஇப் பருகிப் பண் சுவைத்து
ஓடு மா மதி உரிஞ்சும் ஒண்பொனின்
மாடக் கீழ் நிலை மகிழ்ந்து வைகினார்

விளக்கவுரை :

[ads-post]

2688. புரிக் குழல் மடந்தையர் பொம்மல் வெம் முலை
திருக் கழல் குருசில் தார் திளைக்கும் போரினுள்
செருக் குரல் சிறு பறை சிலம்பு கிண்கிணி
அரிப் பறை மேகலை ஆகி ஆர்த்தவே

விளக்கவுரை :

2689. ஏச் செயாச் சிலை நுதல் ஏழைமார் முலைத்
தூச் செயாக் குங்குமம் துதைந்த வண்டு இனம்
வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர் தம்
பூச் செயா மேனி போல் பொலிந்து தோன்றுமே

விளக்கவுரை :

2690. இளவேனில்
குரவம் பாவை கொப்புளித்துக் குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல்
மரவம் பாவை வயிறு ஆரப் பருகி வாடை அது நடப்ப
விரவித் தென்றல் விடு தூதா வேனிலாற்கு விருந்து ஏந்தி
வரவு நோக்கி வயா மரங்கள் இலை ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books