சீவக சிந்தாமணி 3006 - 3010 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3006 - 3010 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3006. மல்லன் மாக் கடல் அன்ன கிடங்கு அணிந்து
ஒல் என் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
செல்வ நீர்த் திருக் கோயில் இம் மண்மிசை
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே

விளக்கவுரை :

3007. விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்த்
துளங்கு ஒளி மணி வணன் தொழுது துன்னினான்
வளம் கெழு மணிவரை நெற்றிப் பால் கடல்
இளங் கதிர்ப் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்

விளக்கவுரை :

[ads-post]

3008. வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
வனை கதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார்
கனை கதிர்த் திருமுகம் அருக்கன் ஆக வான்
புனை மலர்த் தாமரை பூத்தது ஒத்தவே

விளக்கவுரை :

3009. இரிந்தன இருவினை இலிர்த்த மெய்ம் மயிர்
சொரிந்தன கண் பனி துதித்துக் காதலால்
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்த்
திரிந்தனன் வல முறை திலக மன்னனே

விளக்கவுரை :

3010. முத்து ஒளிர் தாமமும் உருவ மாமணித்
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
தத்து நீர்த் தண் கடல் பவழத் தாமமும்
வைத்த பூந் தாமமும் மலிந்து தாழ்ந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books