சீவக சிந்தாமணி 2801 - 2805 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2801 - 2805 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2801. அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும்
பங்கயம் அனைய செங் கண் பகு ஒளிப் பவழம் செவ்வாய்
செங்கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள்
வெம் கடை மழைக் கண் நோக்கி வெய்து உறத் திரண்ட அன்றே

விளக்கவுரை :

2802. தாள் நெடுங் குவளைக் கண்ணித் தளை அவிழ் கோதை மாலை
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில்
பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர்
ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே

விளக்கவுரை :

[ads-post]

2803. சிதர் அரி ஒழுகி ஓடிச் செவி உறப் போழ்ந்து நீண்ட
மதர் அரி மழைக் கண் அம்பா வாங்கு வில் புருவம் ஆகத்
துதை மணிக் கலாபம் மின்னத் தொல் மலர்க் காமன் அம்பு
புதை மலர் மார்பத்து எய்யப் பூ அணை மயங்கி வீழ்வார்

விளக்கவுரை :

2804. பூத் ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி
ஏத் தரும் கொடி அனாரை இரு நடு ஆகப் புல்லிக்
காய்த்தியிட்டு உள்ளம் வெம்பிக் கடைந்திடுகின்ற காமம்
நீத்து நீர்க் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார்

விளக்கவுரை :

2805. பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூந்தார்
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகிக்
கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆகத்
தங்கலர் பருகி ஆரார் தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books