சீவக சிந்தாமணி 2876 - 2880 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2876 - 2880 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2876. அல்லித் தாள் அற்ற போதும் அறாத நூலதனைப் போலத்
தொல்லைத் தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக் கொண்டு உயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்று
எல்லையில் துன்ப வெம் தீச் சுட்டு எரித்திடுங்கள் அன்றே

விளக்கவுரை :

2877. அறவிய மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அருளைச் செய்யின்
பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரோடு ஆடி
மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையின் கறக்கும் தம்மால் காமுறப் பட்ட எல்லாம்

விளக்கவுரை :

[ads-post]

2878. நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர்த்
தொடு மணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதே போல்
கடுமணிக் கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து
அடு மணி ஆவி நீப்பார் அறிவினால் சிறிய நீரார்

விளக்கவுரை :

2879. வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால்
சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி
ஆறு இழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் செம் பொன்
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார்

விளக்கவுரை :

2880. துன்னி மற்று அறத்தைக் கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல்
மின்னுத் தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகிப் பெண்பால்
அன்னப் பார்ப்பு அன்று கொண்ட தடத்து இடை விடுவித்து இட்டான்
பின்னைத் தன் கிளைகள் கூட்டம் பெருந் தகை வித்தினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books