சீவக சிந்தாமணி 2886 - 2890 of 3145 பாடல்கள்
2886. நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை
பொன் பொறி கழல எல்லாப் பொறிகளும் கழல்வதே போல்
சொல் பொறி சோர எல்லாப் பொறிகளும் சோர்ந்து நம்பன்
இல் பொறி இன்பம் நீக்கி இரு ஆயிரர் சூழச் சென்றான்
விளக்கவுரை :
2887. தணக்கு இறப் பறித்த போதும் தான் அளை விடுத்தல் செல்லா
நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும்
மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆகக்
கணைக் கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய்க் கடவுள் ஆனான்
விளக்கவுரை :
[ads-post]
2888. துமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும்
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதித் திருவும் ஆர்ந்த
காமம் மாசு உண்ட காதல் கதிர் வளைத் தோளினாரும்
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார்
விளக்கவுரை :
2889. ஆசாரம் நாணத் தவம் செய்து அலர்க் கற்பகத் தார்ச்
சாசாரன் என்னும் தகை சால் ஒளித் தேவர் கோவாய்
மாசாரம் ஆய மணி வான் உலகு ஆண்டு வந்தாய்
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான்
விளக்கவுரை :
2890. மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்த அதனால்
பொன் ஆர மார்ப சிறைப் பட்டனை போலும் என்றான்
இன்னாப் பிறவிப் பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2886 - 2890 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books