சீவக சிந்தாமணி 3031 - 3035 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3031 - 3035 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3031. அம் சுடர்த் தாமரைக் கையினான் மணிக்
குஞ்சி வெண் படலிகைக் குமரன் நீப்பது
செஞ் சுடர்க் கருங் கதிர்க் கற்றை தேறு நீர்
மஞ்சுடை மதியினுள் சொரிவது ஒத்ததே

விளக்கவுரை :

3032. வேலைவாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
காலை வாய்க் கற்பக மரத்தின் காவலன்
மாலை வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின்
சோலை வாய்ச் சுரும்பு இனம் தொழுது சொன்னவே

விளக்கவுரை :

[ads-post]

3033. தம் கிடை இலாத் திருக் கேசம் தன்னையும்
கொங்கு உடைக் கோதையும் கொய்து நீக்கினாய்
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம்
எம் கிடையவர் இனி எங்குச் செல்பவே

விளக்கவுரை :

3034. என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு
சென்றன விடுக்கிய செல்வன் பொன் மயிர்
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே

விளக்கவுரை :

3035. மேல் படு கற்பக மாலை வேய்ந்து பொன்
ஏற்பு உடைப் படலிகை எடுத்துக் கொண்டு போய்
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிடப்
பால் கடல் பனிமதி போல வீழ்ந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books