சீவக சிந்தாமணி 2791 - 2795 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2791 - 2795 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2791. ஈருள் தடி மூடி ஈண்டும் மலப் பண்டப்
போர்வை புழு மொய்ப்பப் பொல்லாக் குடர் சூடிச்
சார்தற்கு அரிதாகித் தான் நின்று அறா அள்ளல்
நீர்வாய்ச் சுரம் போந்தார் தம்மை நினையாரோ

விளக்கவுரை :

2792. அம் சொல் மடவார் தம் ஆர்வக் களி பொங்க
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
குஞ்சிக் களியானைக் கோட்டால் உழப்பட்டும்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே

விளக்கவுரை :

[ads-post]

2793. பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
கண்ணார் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால்
மண்ணார் மணிப் பூணோய் மக்கள் உறும் துன்பம்
நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே

விளக்கவுரை :

2794. செந் தீப் புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும்
அந்தோ என மாற்றால் ஆற்றப் புடை உண்டும்
தந்தீக எனா முன் கை வீக்கத் தளர்வுற்றும்
நொந்தார் குடிச் செல்வர் நோன்மை நுகம் பூண்டார்

விளக்கவுரை :

2795. கண் சூன்றிடப் பட்டும் கால் கை களைந்து ஆங்கே
அண்பல் இறக் கையால் ஆற்றத் தகர் பெற்றும்
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால்
புண் செய்திடப் பட்டும் புன்கண் உழப்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books