சீவக சிந்தாமணி 3056 - 3060 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3056 - 3060 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3056. மன்னவ கேள்மதி வானில் வாழ்பவர்
பொன் இயல் கற்பகப் போக பூமியார்
என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே

விளக்கவுரை :

3057. அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்க்
கடி கமழ் தாமரைக் கண்ணினான் இவன்
வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
ஒடிவறு பேர் ஒளி உட்கத் தக்கதே

விளக்கவுரை :

[ads-post]

3058. திருவினோடு அகன்ற மார்பின் சீவக சாமி என்பான்
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்

விளக்கவுரை :

சேணிகன் வினா

3059. மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும்
ஏதம் இன்று இயம்புமின் அடிகளோ எனப்
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான்
காதலின் கணம் தொழக் காவல் மன்னனே

விளக்கவுரை :

3060. பாட்டு அரும் கேவலப் பரவை மாக் கடல்
கூட்டு அரும் கொழுந் திரை முகந்து மா முனி
மோட்டு இரு மணி முகில் முழங்கிப் பெய்தலின்
ஊட்ட அரும் அற அமிர்து உலகம் உண்டதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books