சீவக சிந்தாமணி 2956 - 2960 of 3145 பாடல்கள்
2956. விண்ணோர் மட மகள் கொல் விஞ்சை மகளே கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவ தத்தை என்று
எண் ஆய வான் நெடுங் கண் மெய் கொள்ள ஏமுற்றுப்
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே
விளக்கவுரை :
2957. கொல் வேல் நெடுங் கண் குணமாலை குஞ்சரத்தால்
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்துப்
புல்லிப் புணர் முலையின் பூங் குவட்டின் மேல் உறைந்தாய்
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ
விளக்கவுரை :
[ads-post]
2958. தூம்பு உடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்
பாம்பு உடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்பு உடைய இன் அமுதாச் சேர்ந்தாய்க்கு இனி அதுவே
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே
விளக்கவுரை :
2959. தாழ்ந்து உலவி மெல் முலை மேல் தண் ஆரம் வில் விலங்கப்
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏப் பெற்றுப் போகலாய்
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ
விளக்கவுரை :
2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ அமுதோ பிணையோ எனப் பிதற்றித்
துண் என் சிலைத் தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
புண் மேல் கிழிபோல் துறத்தல் பொருள் ஆமோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2956 - 2960 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books