Showing posts with label நல்லாதனார். Show all posts


திரிகடுகம் 96 - 100 of 100 பாடல்கள்

பெய்யெனப் பெய்யும் மழை

96. கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்
பெய்எனப் பெய்யும் மழை.

விளக்கவுரை :

பாவச் செயல்கள்

97. ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

விளக்கவுரை :

மும்மாரிக்கு வித்து

98. செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

விளக்கவுரை :

நல்லுலகம் சேராதவர்

99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

விளக்கவுரை :

மன்னர்க்கு உறுப்புகள்

100. பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.

விளக்கவுரை :

திரிகடுகம் முற்றிற்று.


திரிகடுகம் 91 - 95 of 100 பாடல்கள்

உடல் பற்றுடைய மூடர் செய்கை

91. பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தேம் என்றல் - மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

விளக்கவுரை :

பிறப்பின் பயனை அடையாதவர்

92. விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானும் இம்மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

விளக்கவுரை :

உயிர்க்கு அறியாமையை அளிப்பவை

93. இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.

விளக்கவுரை :

நல்லொழுக்கம் இல்லாதவர்

94. நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.

விளக்கவுரை :

நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்

95. அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்
வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

விளக்கவுரை :


திரிகடுகம் 86 - 90 of 100 பாடல்கள்

குற்றங்களை உண்டாக்கும் பகைகள்

86. அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றம் தரூஉம் பகை.

விளக்கவுரை :

மூடரின் செயல்கள்

87. கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு
அகன்ற இனம்புகு வானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

விளக்கவுரை :

மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

88. பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

விளக்கவுரை :

பிறந்தும் பிறவாதவர்

89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

விளக்கவுரை :

நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்

90. ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருள்உலகம் சேராத ஆறு.

விளக்கவுரை :
Powered by Blogger.