சீவக சிந்தாமணி 2636 - 2640 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2636 - 2640 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2636. முன்னுபு கீழ்த் திசை நோக்கி மொய்ம்மலர்
நல் நிறத் தவிசின் மேல் இருந்த நங்கைமார்
இன் மயிர் உகுக்கிய இருந்த தோகைய
பன் மயில் குழாம் ஒத்தார் பாவை மார்களே

விளக்கவுரை :

2637. மணி இயல் சீப்பு இடச் சிவக்கும் வாள் நுதல்
அணி இரும் கூந்தலை ஒளவை மார்கள்தாம்
பணிவு இலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல்
துணி பொருள் சிந்தியாத் துறத்தல் மேயினார்

விளக்கவுரை :

[ads-post]

2638. கன்னியர் ஆயிரர் காய் பொன் கொம்பு அனார்
பொன் இயல் படலிகை ஏந்திப் பொன்மயிர்
நல் நிலம் படாமையே அடக்கி நங்கைமார்
தொல் மயிர் உகுத்த நல் மயிலின் தோன்றினார்

விளக்கவுரை :

2639. பொன் குடம் திரு மணி பொழியப் பெய்த போல்
எற்பு உடம்பு எண் இலாக் குணங்களான் நிறைத்து
உற்று உடன் உயிர்க்கு அருள் பரப்பி ஓம்பினார்
முற்று உடன் உணர்ந்தவன் அமுதம் முன்னினார்

விளக்கவுரை :

2640. புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் பொற்பு இல் பல் சனம்
இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி அங்க நூல்
அகழ்ந்து கொண்டு அரும் பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்து எரி விளக்கு எனத் திலகம் ஆயினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books