சீவக சிந்தாமணி 2641 - 2645 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2641 - 2645 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2641. அலை மணிக் கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா
நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூச் சுமப்ப மன்னன்
சில மலர் தானும் ஏந்திச் சென்று சீர் பெருக வாழ்த்தி
இல மலர்ப் பஞ்சிப் பாதத்து எழில் முடி தீட்டினானே

விளக்கவுரை :

2642. கடியவை முன்பு செய்தேன் கண்ணினால் காணச் சில் நாள்
அடிகள் இந் நகரின் உள்ளே உறைக என அண்ணல் கூற
முடி கெழு மன்னற்கு ஒன்று மறு மொழி கொடாது தேவி
படிமம் போன்று இருப்ப நோக்கிப் பம்மை தான் சொல்லினாளே

விளக்கவுரை :

[ads-post]

2643. காதலன் அல்லை நீயும் காவல நினக்கு யாமும்
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்னத்
தாது அலர் தாம மார்பன் உரிமையும் தானும் மாதோ
போது அவிழ் கண்ணி ஈர்த்துப் புனல் வரப் புலம்பினானே

விளக்கவுரை :

2644. ஏதிலன் ஆயினாலும் இறைவர் தம் அறத்தை நோக்கக்
காதலன் அடிகள் என்னக் கண் கனிந்து உருகிக் காசு இல்
மா தவ மகளிர் எல்லாம் மா பெருந் தேவியாரை
ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடுமின் என்றார்

விளக்கவுரை :

2645. திரை வளர் இப்பி ஈன்ற திருமணி ஆர மார்பின்
வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைரக் குன்று அனைய திண் தோள்
விரை வளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டினேம் என்று
உரை விளைத்து உரைப்பக் காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books