சீவக சிந்தாமணி 2706 - 2710 of 3145 பாடல்கள்
2706. ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார்
கொய் பூ மாலை குழல் மின்னும் கொழும் பொன் தோடும் குண்டலமும்
ஐயன் மார்கள் துளக்கு இன்றி ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
மொய்யார் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகி நிறைந்ததே
விளக்கவுரை :
சோலை நுகர்வு
2707. பூ நிறை செய்த செம் பொன் கோடிகம் புரையும் அல்குல்
வீ நிறை கொடி அனாரும் வேந்தனும் இருந்த போழ்தில்
தூ நிறத் துகிலின் மூடிப் படலிகை கொண்டு வாழ்த்தி
மா நிறத் தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள்
விளக்கவுரை :
[ads-post]
2708. தட முலை முகங்கள் சாடிச் சாந்து அகம் கிழிந்த மார்பின்
குட வரை அனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய்
தொடை மலர் வெறுக்கை ஏந்தித் துன்னினன் வேனில் வேந்தன்
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான்
விளக்கவுரை :
2709. முடித் தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம்
பொடித்துப் பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழக்
கடுத்த வாள் கனல ஏந்திக் கன்னியர் காவல் ஓம்ப
இடிக் குரல் சீயம் ஒப்பான் இழை ஒளி விளங்கப் புக்கான்
விளக்கவுரை :
2710. இலங்கு பொன் ஆரம் மார்பின் இந்திரன் உரிமை சூழக்
கலந்த பொன் காவு காண்பான் காமுறப் புக்கதே போல்
அலங்கு பொன் கொம்பு அனாரும் மன்னனும் ஆட மாதோ
நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்று அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2706 - 2710 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books