சீவக சிந்தாமணி 3091 - 3095 of 3145 பாடல்கள்
3091. சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகித்
துறவு நெறிக் கடவுள் அடி தூமமொடு தொழுதார்
விளக்கவுரை :
3092. பால் அனைய சிந்தை சுடரப் படர் செய் காதி
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகிக்
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
கோல மலர்ச் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்
விளக்கவுரை :
[ads-post]
3093. முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தித் தொழுதும் யாம்
விளக்கவுரை :
3094. ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
நாத் தழும்ப ஏத்தித் தவ நங்கையவர் நண்ணித்
தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார்
விளக்கவுரை :
3095. செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
மொய்ம் மலர் தூய் முனியாது வணங்குதும்
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3091 - 3095 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books