திரிகடுகம்
91 - 95 of 100 பாடல்கள்
உடல் பற்றுடைய மூடர் செய்கை
91. பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல்
உயிரை
இறுதிக்கண்
யாமிழந்தேம் என்றல் - மறுவந்து
தன்னுடம்பு
கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா
உடம்பின் குறி.
விளக்கவுரை :
பிறப்பின் பயனை அடையாதவர்
92. விழுத்திணைத் தோன்றா தவனும்
எழுத்தினை
ஒன்றும்
உணராத ஏழையும் - என்றும்
இறந்துரை
காமுறு வானும் இம்மூவர்
பிறந்தும்
பிறவா தவர்.
விளக்கவுரை :
உயிர்க்கு அறியாமையை அளிப்பவை
93. இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா
துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்ல
காதல்
படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை
வாழும் உயிர்க்கு.
விளக்கவுரை :
நல்லொழுக்கம் இல்லாதவர்
94. நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை
செய்வானும்
பெண்பாலைக்
காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான
சொல்லாடு வானும் இம்மூவர்
ஒழுக்கம்
கடைப்பிடியா தார்.
விளக்கவுரை :
நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்
95. அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும்
மாந்தர்
செறிவழங்கத்
தோன்றும் விழைவும் - செறுநரின்
வெவ்வுரை
நோனா வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை
நீக்கும் படை.
விளக்கவுரை :