ஐங்குறு நூறு
361 - 365 of 500 பாடல்கள்
37. முன்னிலைப் பத்து
361. உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல்
அகந்துறை
வேனிற்
பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை
தை இய மடவரல் மகளே
கண்ணினும்
கதவநின் முலையே
முலையினும்
கதவநின் தடமென் தோளே.
விளக்கவுரை :
362. பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண்
யானை உறுபகை நினையாது
யாக்குவந்
தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி
நெஞ்சம் உய்த்தர
இருள்பொர
நின்ற இரவி னானே.
விளக்கவுரை :
363. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவல்
எயினர் தங்கைநின் முலைய
சுணங்கென
நினைதி நீயே
அணங்கென
நினையும்என் அணங்குறு நெஞ்சே.
விளக்கவுரை :
364. முளமா வல்சி எயினர் தங்கை
இளமா
எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினேன்
இரக்கும் அளவை
வெள்வேல்
விடலை விரையா தீமே.
விளக்கவுரை :
365. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன்
வல்சிப் படுபுள் ஒப்பும்
நலமாண்
எயிற்றி போலப் பலமிகு
நல்நலம்
நயவர உடையை
என்நோற்
றனையோ மாஇன் தளிரே.
விளக்கவுரை :