ஐங்குறு நூறு
476 - 480 of 500 பாடல்கள்
476. கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப
பருவம்
செய்தன பைங்கொடி முல்லை
பல்லான்
கோவலர் படலைக் கூட்டும்
அன்புஇல்
மாலையும் உடைத்தோ
வன்புறை
பாண அவர்சென்ற நாடே.
விளக்கவுரை :
477. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலர்
துயரமொடு அரும்படர் உழப்போள்
கையறு
நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்
சிறுவரைத்
தங்குவை யாயின்
காண்குவை
மன்ஆல் பாணஎம் தேரே.
விளக்கவுரை :
478. நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய
நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெம்
காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது
உரைமதி நீயே
முல்லை
நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.
விளக்கவுரை :
479. சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய
நாடிடை
விலங்கிய எம்வயின் நாள்தொறும்
அரும்பனி
கலந்த அருளில் வாடை
தனிமை
எள்ளும் பொழுதில்
பனிமலர்க்
கண்ணி கூறியது எமக்கே.
விளக்கவுரை :
480. நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு
நீயும்
குருசிலை யல்லை மாதோ
நின்வெம்
காதலி தனிமனைப் புலம்பி
ஈரிதழ்
உண்கண் உகுத்த
பூசல்
கேட்டு மருளா தோயே.
விளக்கவுரை :