ஐங்குறு நூறு
371 - 375 of 500 பாடல்கள்
38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு
பத்து.
371. மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடும்
குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி
இனிய வாகுக தில்ல
அறநெறி
இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதற்
குறுமகள் போகிய சுரனே.
விளக்கவுரை :
372. என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத்
தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல்
மூதூர் அலரெழச்
செழும்பல்
குன்றம் இறந்தஎன் மகளே.
விளக்கவுரை :
373. நினைத்தொறும் கலிலும் இடும்பை
எய்துக
புலிக்கோட்
பிழைட்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை
அணைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம்
என்மகள் உய்த்த
வம்பமை
வல்வில்விடலை தாயே.
விளக்கவுரை :
374. பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ
மிளி
முன்பின் காளை காப்ப
முடியகம்
புகாக் கூந்தலள்
கடுவனும்
அறியாக் காடுஇறந் தோளே.
விளக்கவுரை :
375. இதுவென் பாவை பாவை இதுஎன்
அலமரு
நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி
எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும்
காண்தொறும் கலங்க
நீங்கின
ளோஎன் பூங்க ணோளே.
விளக்கவுரை :