கலித்தொகை 33 of 150 தொகைகள்
33.
வீறு சால் ஞாலத்து வியல்
அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப்,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத்,
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
மணி போல அரும்பு ஊழ்த்து, மரம்
எல்லாம் மலர் வேயக்
காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்;
விளக்கவுரை :
எரி உரு உறழ இலவம் மலரப்,
பொரி உரு உறழப் புன்கு பூ உதிரப்,
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்பத்,
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய
வந்து,
ஆர்ப்பது போலும் பொழுது; என்
அணி நலம்
போர்ப்பது போலும் பசப்பு;
விளக்கவுரை :
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு; நைந்து
உள்ளி
உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளித்
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில்
உகுவன போலும், வளை; என்
கண் போல்
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்;
மிகுவது போலும் இந் நோய்;
விளக்கவுரை :
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊதத் -
தூது அவர் விடுதரார்; துறப்பார் கொல்? நோதக
இரும் குயில் ஆலும் அரோ;
விளக்கவுரை :
என ஆங்கு,
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி;
நீல் இதழ் உண் கண்ணாய் நெறி கூந்தல் பிணி விட
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்ற,
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் -
கால் உறழ் கடு திண் தேர் கடவினர் விரைந்தே.
விளக்கவுரை :