ஐங்குறு நூறு 486 - 490 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 486 - 490 of 500 பாடல்கள்

486. பெரும்புன் மாலை ஆனது நினைஇ
அரும்படர் உழைத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வன்புதெரிந்து ஊர்மதி வலவநின்
புள்ளியல் கலைமாப் பூண்டதேரே.

விளக்கவுரை :

487. இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறிதொடி உள்ளம் உவப்ப
மதியுடை வலவ ஏமதி தேரே.

விளக்கவுரை :

488. கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல் காதலி கருதும் பொழுதே
விரிஉளை நன்மாப் பூட்டிப்
பருவரல் தீரக் கடவுமதி தேரெ.

விளக்கவுரை :

489. அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
மெண்புல முல்லை மலரும்மாலைப்
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண்புரி வண்கயிறு இயக்கிநின்
வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

விளக்கவுரை :

490. அம்தீம் கிளவி தான்தர எம்வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்
ஆய்த்தொடி அரும்படர் தீர
ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books