ஐங்குறு நூறு
461 - 465 of 500 பாடல்கள்
47. தோழி வற்புறுத்த பத்து
461. வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை
தகையக்
கான்பிசிர்
கற்பக் கார்தொடங் கின்றே
இனையல்
வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து
அமைகுவர் அல்லர்
வெற்றி
வேந்தன் பாசறை யோரே.
விளக்கவுரை :
462. எதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம்
கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி
மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
தகையெழில்
வாட்டுநர் அல்லர்
முகையவிழ்
புறவுஇன் நாடிறந் தோரே.
விளக்கவுரை :
463. புதன்மிசை நறுமலர் கவின்பெறத்
தொடரிநின்
நலமிகு
கூந்தல் தகைகொளப் புனைய
வாராது
அமையலோ இலரே நேரார்
நாடுபடு
நன்கலம் தரீஇயர்
நீடினர்
தோழிநம் காத லோரே.
விளக்கவுரை :
464. கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
இவர்கொடிப்
பீரம் இரும்புதல் மலரும்
அற்சிரம்
மறக்குநர் அல்லர்நின்
நல்தோள்
மருவரற்கு உலமரு வோரே.
விளக்கவுரை :
465. நீர்இருவு அன்ன நிமிர்பரி
நெடுந்தேர்
கார்செய்
கானம் பிற்படக் க¨டைஇ
மயங்கு
மலர் அகலம் நீஇனிது முயங்க
வருவர்
வாழி தோழி
செருவெம்
குருசில் தணிந்தனன் பகையே.
விளக்கவுரை :