ஐங்குறு நூறு 496 - 500 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 496 - 500 of 500 பாடல்கள்

496. மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப்
பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர்
தோள்துணை யாக வந்தனர்
போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.

விளக்கவுரை :

497. குறும்பல் கோதை கொன்றை மலர
நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர
மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே
பேரியல் அரிவைநின் உள்ளிப்
போர்வெம் குருசில் வந்த மாறே.

விளக்கவுரை :

498. தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன
நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன
வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென
விரைசெலல் நெடுந்தேர் கடைஇ
வரையக நாடன் வந்த மாறே.

விளக்கவுரை :

499. பிடவம் மலரத் தளவம் நனையக்
கார்கவின் கொண்ட கானம் காணின்
வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது
வந்தனர் ஆல்நம் காதலர்
அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே.

விளக்கவுரை :

500. கொன்றைப் பூவின் பசந்த உண்கண்
குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்
தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர்
வியன்நெடும் பாசறை நீடிய
வயமான் தோன்றல்நீ வந்த மாறே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு முற்றிற்று.

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books