கலித்தொகை 10 of 150 தொகைகள்



கலித்தொகை 10 of 150 தொகைகள்

10. வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்
அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெகிக்,
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ்சுரம் -

விளக்கவுரை :

இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள் மன்னோ!
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடை பெயர்வாய் ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?

விளக்கவுரை :

முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன்னோ!
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத்
துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்?

விளக்கவுரை :

பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள் மன்னோ!
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?

விளக்கவுரை :

என ஆங்கு,
'வினை வெகி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப்
புனை இழாய்! நின் நிலை யான் கூறப், பையென,
நிலவு வேல் நெடுந்தகை, நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!

விளக்கவுரை :

கலித்தொகை, பெருங்கொடுங்கோன், கபிலர், kalithogai, perungodungoan, kabilar, ettu thogai, tamil books