Showing posts with label மதுரைக் கண்ணங் கூத்தனார். Show all posts



கார் நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது

36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

விளக்கவுரை :

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்.

விளக்கவுரை :

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது

38. புகர்முகம் பூழிப் புரள வுயர்நிலைய
வெஞ்சின் வேழம் பிடியோ டிசைந்தாடுந்
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி யூடு நிலை.

விளக்கவுரை :

39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

விளக்கவுரை :

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது

40. வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.

விளக்கவுரை :

கார் நாற்பது முற்றிற்று



கார் நாற்பது 31 - 35 of 40 பாடல்கள்

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது

31. கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி.

விளக்கவுரை :

32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
பாடஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு.

விளக்கவுரை :

33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட.

விளக்கவுரை :

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது

34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணித்த
ஒண்ணுதல் மாதர் திறத்து.

விளக்கவுரை :

35. சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு.

விளக்கவுரை :



கார் நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

26. நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை.

விளக்கவுரை :

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது

27. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்
பள்ளியுட் பாயும் பசப்பு.

விளக்கவுரை :

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

28. இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்
பொன்செய் குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.

விளக்கவுரை :

29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய கரம்.

விளக்கவுரை :

30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து.

விளக்கவுரை :
Powered by Blogger.