சீவக சிந்தாமணி 2606 - 2610 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2606 - 2610 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2606. மறை ஒன்று உரைப்பன போல் மலர்ந்து நீண்டு செவி வாய் வைத்து
உறைகின்ற ஓடு அரிக் கண் உருவக் கொம்பின் எண்மரும்
இறைவி அடி பணிய எடுத்துப் புல்லி உலகு ஆளும்
சிறுவர்ப் பயந்து இறைவன் தெளிவீர் என்றாள் திரு அன்னாள்

விளக்கவுரை :

2607. பொங்கும் மணிமுடி மேல் பொலிந்து எண் கோதைத் தொகை ஆகிக்
கங்குல் கனவு அகத்தே கண்ணுள் தோன்றி வந்தீர் நீர்
எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து
கொங்கு உண் நறும் பைந்தார்க் கோமான் இங்கே வருக என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2608. சிங்கம் நடப்பது போல் சேர்ந்து பூத் தூய்ப் பலர் வாழ்த்தத்
தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி தீட்டி
எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இருவில் கண்
பொங்க இடு தவிசில் இருந்தான் போர் ஏறு அனையானே

விளக்கவுரை :

2609. கொற்றவி மகனை நோக்கிக் கூறினள் என்ப நும் கோக்கு
உற்றதைப் பிறர்கள் கூற உணர்ந்தனை ஆயின் நானும்
இற்று என உரைப்பக் கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின்
செற்றவர்ச் செகுத்த வை வேல் சீவக சாமி என்றாள்

விளக்கவுரை :

2610. நாகத்தால் விழுங்கப் பட்ட நகை மதிக் கடவுள் போலப்
போகத்தால் விழுங்கப் பட்டுப் புறப்படான் புன்சொல் நாணான்
ஆகத்தான் அமைச்சர் நுண்நூல் தோட்டியால் அழுத்தி வெல்லும்
பாகர்க்கும் தொடக்க நில்லாப் பகடு போல் பொங்கியிட்டான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books