சீவக சிந்தாமணி 2611 - 2615 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2611 - 2615 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2611. நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார் தம்
கண்வலைப் பட்ட போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும்
பெண்மையைப் பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார்
அண்ணலைத் தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்று விட்டார்

விளக்கவுரை :

2612. கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்குக் கற்றோர்
சொல் சிறை அழித்து வேந்தன் துணை முலை துறத்தல் செல்லான்
வில் சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேல் கண்
நல் சிறைப் பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான்

விளக்கவுரை :

[ads-post]

2613. பிளிறுவார் முரசத்தானைப் பெருமகன் பிழைப்பு நாடிக்
களிறு மென்று உமிழப் பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான்
வெளிறு முன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ

விளக்கவுரை :

2614. வனை கலக் குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றிக்
கனை குரல் உருமின் ஆர்ப்பக் காவலன் நின்னை வேண்டி
வினை மயில் பொறியில் என்னைப் போக்கி விண் விரும்பப் புக்கான்
புனை முடி வேந்த போவல் போற்று என மயங்கி வீழ்ந்தான்

விளக்கவுரை :

2615. சீத நீர் தெளித்துச் செம் பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால்
மாதரார் பலரும் வீச வளர்ந்து எழு சிங்கம் போலப்
போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன்
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்னச் சொன்னாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books