சீவக சிந்தாமணி 2616 - 2620 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2616 - 2620 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2616. பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும்
அறிந்திலம் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்து கின்றாம்
கறந்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இரங்கின் அல்லால்
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று எனப் பெயர்க்கலாமோ

விளக்கவுரை :

2617. சுமைத் தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப் பட்டு அன்னது அங்கண்
இமைத்த கண் விழித்தல் அன்றி இறந்து பாடு எய்து கின்றாம்
உமைத்துழிச் சொறியப் பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம்

விளக்கவுரை :

[ads-post]

2618. கடுவளி புடைக்கப் பட்ட கண மழைக் குழாத்தின் நாமும்
விடு வினை புடைக்கப் பாறி வீற்று வீற்று ஆயின் அல்லால்
உடன் உறை பழக்கம் இல்லை ஒழி மதியத்தை காதல்
வடு உடைத்து என்று பின்னும் மா பெருந் தேவி சொன்னாள்

விளக்கவுரை :

2619. இருந்து இளமைக் கள் உண்டு இடை தெரிதல் இன்றிக்
கருந் தலைகள் வெண் தலைகள் ஆய்க் கழியும் முன்னே
அருந் தவமும் தானமும் ஆற்றுமினே கண்டீர்
முருந்து அனைய தூ முறுவல் முற்று இழையார் சேரி

விளக்கவுரை :

2620. உடற்றும் பிணித் தீ உடம்பின் உயிர் பெய்திட்டு
அடுத்து உணர்வு நெய் ஆக ஆற்றல் துவை ஆகக்
குடித்து உண்ணும் கூற்றம் குடில் பிரியா முன்னே
கொடுத்து உண்மின் கண்டீர் குணம் புரிமின் கண்டீர்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books