சீவக சிந்தாமணி 2941 - 2945 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2941 - 2945 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2941. குஞ்சரம் அயா உயிர்த்து அனைய குய் கமழ்
அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம்
இஞ்சி மா நகர் இடும் பிச்சை ஏற்றலால்
அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே

விளக்கவுரை :

அந்தப்புர விலாவணை

2942. ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணிப்
பரிய கண் படா முலைப் பைம் பொன் கொம்பு அனீர்

விளக்கவுரை :

[ads-post]

2943. காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
ஏதிலம் என்ற சொல் செவிச் சென்று எய்தலும்
மாதரார் மழை மலர்த் தடம் கண் மல்குநீர்
போது உலாம் மார்பின் வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே

விளக்கவுரை :

2944. செருக்கி நிணம் தின்று சிவந்து மன்னர் உயிர் செற்ற
நெருப்புத் தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணிப்பூண்
பரப்பினிடைப் பாய்ந்து குளம் ஆய்ப் பால் ஆர் படா முலையை
வருத்தி மணி நெடுங் கோட்டு அருவி போல வீழ்ந்தனவே

விளக்கவுரை :

2945. அழல் ஏந்து வெம் கடுஞ் சொல் உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
நிழல் ஏந்து பூம் கொடிகள் நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
கழல் ஏந்து சேவடிக் கீழ்க் கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்பக்
குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் கோதை மடவாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books