சீவக சிந்தாமணி 2996 - 3000 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2996 - 3000 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2996. என்பு அரிந்து எரிதலைக் கொள்ள ஈண்டிய
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
பொன் சொரி தாமரைப் போது போன்றவே

விளக்கவுரை :

2997. பூந் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மாமணி
காந்திய கற்பகக் கானம் ஆயினான்
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே

விளக்கவுரை :

[ads-post]

2998. தேய் பிறை உருவக் கேணித் தேறு நீர் மலர்ந்த தேனார்
ஆய் நிறக் குவளை அஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாள் கண்
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையைத் தொழுது வாழ்த்திச்
சேய் நிறச் சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே

விளக்கவுரை :

சமவ சரண வருணனை

2999. நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
விருந்து பட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
சுரந்தன சுடர் மணிப் பாண்டில் என்பவே

விளக்கவுரை :

3000. மங்குலாய் அகில் புகை மணந்து கற்பகப்
பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
தங்கி இத் தரணியும் விசும்பும் தாமரோ
செங் கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books