சீவக சிந்தாமணி 3071 - 3075 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3071 - 3075 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3071. பார்க் கடல் பருகி மேகம் பாம்பு இனம் பதைப்ப மின்னி
வார்ப் பிணி முரசின் ஆர்த்து மண்பக இடித்து வானம்
நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான்
மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும் முனிக் களிறு அனைய கோமான்

விளக்கவுரை :

3072. திங்கள் நான்கு அவையும் நீங்கத் திசைச் செல்வார் மடிந்து தேம்கொள்
பங்கயப் பகை வந்து என்னப் பனி வரை உருவி வீசும்
மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே

விளக்கவுரை :

[ads-post]

3073. வடி மலர் நெடுங் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு
அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான்
கடி மலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான்
முடிதவக் கடலை நீந்தி இன்னணம் முற்றினானே

விளக்கவுரை :

3074. ஒளிறு தேர் ஞானம் பாய் மா இன் உயிர் ஓம்பல் ஓடைக்
களிறு நல் சிந்தை காலாள் கருணை ஆம் கவசம் சீலம்
வெளிறு இல் வாள் விளங்கு செம் பொன் வட்டம் மெய்ப் பொருள்களாகப்
பிளிறு செய் கருமத் தெவ்வர் பெரு மதில் முற்றினானே

விளக்கவுரை :

3075. உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவத் திண் தேர்
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள்
திறப்படப் பண்ணிப் பொல்லாச் சிந்தனை வாயில் போந்து
சுறக் கடல் அனைய தானை துளங்கப் போர் செய்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books