சீவக சிந்தாமணி 2871 - 2875 of 3145 பாடல்கள்
2871. மடத்தகைய நல்லார் மனம் கரிய மாற்றார்
பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின்
எடுப்ப அரிய துன்பத்து இடைப் படுவர் இன்னா
நடுக்கு உடைய காமம் விடுத்திடுதல் நன்றே
விளக்கவுரை :
2872. தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்குச் செம்பொன்
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
அருளும் நக வையம் நக ஐம் பொறியும் நையப்
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2873. பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம்
மை படும் வினைத் துகள் வழக்கு நெறி மாயம்
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செந் தீக்
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான்
விளக்கவுரை :
2874. காமம் உடையார் கறுவொடு ஆர்வம் உடையாரும்
தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார்
ஏமம் உடையார்கள் இவர் அல்லர் இவை இல்லா
வாமன் அடி அல்ல பிற வந்தியன்மின் என்றான்
விளக்கவுரை :
2875. பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பல் மா
யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கிக்
காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப்
போவர் புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2871 - 2875 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books