சீவக சிந்தாமணி 2696 - 2700 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2696 - 2700 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2696. குழியப் பெரிய கோல் முன்கை மணி ஆர் காந்தள் குவி விரல் மேல்
கழியப் பெரிய அருவிலைய சிறிய மணி மோதிரம் கனலத்
தழியப் பெரிய தட மென் தோள் சலாகை மின்னத் தாழ்ந்து இலங்கும்
விழி கண் மகர குண்டலமும் தோடும் காதில் மிளர்ந்தனவே

விளக்கவுரை :

2697. நாண் உள் இட்டுச் சுடர் வீச நல் மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்து அணிந்து பெருங் கண் கருமை விருந்து ஊட்டி
நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடுச் சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து
தோள் நீர்க் கடலுள் பவள வாய்த் தொண்டைக் கனிகள் தொழுதனவே

விளக்கவுரை :

[ads-post]

2698. மாலை மகளிர் அணிந்ததன் பின் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
சோலை மஞ்ஞைத் தொழுதி போல் தோகை செம் பொன் நிலம் திவளக்
காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கதிர் வேலும்
நீலக் குவளை நிரையும் போல் கண்ணார் காவில் இருந்தாரே

விளக்கவுரை :

2699. மணி வண்டு ஒன்றே நலம் பருக மலர்ந்த செந் தாமரைத் தடம் போலத்
அணிவேல் மன்னன் நலம் பருக அலர்ந்த அம்பு ஆர் மழைக் கண்ணார்
பணி ஆர் பண்ணுப் பிடி ஊர்ந்து பரூஉக் கால் செந் நெல் கதிர் சூடித்
தணியார் கழனி விளையாடித் தகை பாராட்டத் தங்கினார்

விளக்கவுரை :

2700. எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார் ஒலியல் மாலை புறம் தாழக்
கண்ணக் கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books