சீவக சிந்தாமணி 2776 - 2780 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2776 - 2780 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2776. கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார்
இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும்
செல்ப அந் நரகம் தன்ணுள் தீ வினைத் தேர்கள் ஊர்ந்தே

விளக்கவுரை :

விலங்கு கதித் துன்பம்

2777. எரி நீரவே நரகம் அந் நரகத் துன்பத்து
ஒரு நீரவே விலங்கு தாம் உடைய துன்பம்
பெரு நீர வாள் தடம் கண் பெண் அணங்கு பூந்தார்
அருநீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்

விளக்கவுரை :

[ads-post]

2778. கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த் தினைகள் ஆர்த்தும்
மழை தவமும் குன்றில் வயமா முழங்க
உழை அளிய தாம் உறூஉம் துன்பங்கள் நின் மேல்
விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய்

விளக்கவுரை :

2779. நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர்
குணன் நஞ்சர் கூற்று அனைய கோள் நாய் மடுப்பக்
கண மஞ்ஞை அஞ்சிக் கழுத்து ஒளிப்ப கண்டாய்
மணம் மல்கு பூந்தார் மழை தழீஇய கையாய்

விளக்கவுரை :

2780. மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டிக்
கண் ஆர் மறி அறுத்துக் கையால் உதிரம் தூய்
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இவ் உலகம்
நண்ணார்க் கடந்தோய் நமன் உலகின் நால் மடங்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books