சீவக சிந்தாமணி 2786 - 2790 of 3145 பாடல்கள்
2786. எரி வளைப்ப வெம்புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும்
அரி வளைப்பக் குஞ்சரமும் ஆலி போல் நீராம்
வரி வளைக்கும் வெண் மயிர்க்கும் முத்திற்கும் மாந்தர்
திரு வளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்
விளக்கவுரை :
2787. வேள்வி வாய்க் கண்படுத்தும் வெவ் வினை செய் ஆடவர் கை
வாளின் வாய்க் கண் படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல்
கோள் இமிழ்ப்பு நீள் வலை வாய்க் கண்படுத்தும் இன்னணமே
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம்
விளக்கவுரை :
[ads-post]
2788. கொல்வாரும் கூட்டுள் செறிப்பாரும் ஆடவர்கள்
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே
அல்லாத பைங் கிளியும் பூவையும் ஆதியா
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏம் உறு நோய் செய்பவே
விளக்கவுரை :
2789. மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும்
பல்லவரே அன்றிப் பகுத்து உணாப் பாவிகளும்
அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார்
வில் பொரு தோள் மன்னா விலங்காய்ப் பிறப்பவே
விளக்கவுரை :
மக்கள் கதித் துன்பம்
2790. தம்மை நிழல் நோக்கித் தாங்கார் மகிழ் தூங்கிச்
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
கொம்மைக் குழகு ஆடும் கோல வரை மார்பர்
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2786 - 2790 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books