சீவக சிந்தாமணி 2946 - 2950 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2946 - 2950 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2946. குலிக அம் சேற்றுள் நாறிக் குங்கும நீருள் ஓங்கிப்
பொலிக என வண்டு பாடப் பூத்த தாமரைகள் போலும்
ஒலி கழல் அடிகள் நும் கீழ்ப் பிழைத்தது என் உரைமின் என்னப்
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்

விளக்கவுரை :

2947. அருந் தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயா உயிர்த்த ஆண்மைப்
பெருந் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதா மே
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
விருந்தினர் போல நின்றீர் வெற்றுடல் காண்மின் என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2948. கோதையும் துகிலும் ஏந்திக் குங்குமம் எழுதிக் கொய் பூந்
தாது கொண்டு அளகத்து அப்பித் தட முலை வருடிச் சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகிக் கோமான் எண்ணமே எண்ணி னீரே

விளக்கவுரை :

2949. பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சிக்
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவிக் கொள்ளீர்
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்

விளக்கவுரை :

2950. முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய்க் கிடந்து மின்ன
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
நட்பு விட்டு ஒழியும் ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books