சீவக சிந்தாமணி 2851 - 2855 of 3145 பாடல்கள்
2851. முழு நீர் வளை மேய்தலின் முத்து ஒழுகிப்
பொழி நீர் நிலவின் இருள் போழ்ந்து அரிசிக்
கழு நீர் ஒழுகக் கழு நீர் மலரும்
தழு நீரது தாதகி என்று உளதே
விளக்கவுரை :
2852. கயல் பாய்ந்து உகளக் கடி அன்னம் வெரீஇ
வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல்
அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும்
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே
விளக்கவுரை :
[ads-post]
2853. அவணத்தவர் கூந்தல் அகில் புகையைச்
சிவணிச் சிறுகால் கமுகம் பொழில் சேர்ந்து
உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும்
பவணத்து ஒரு பாங்கினதால் அளிதோ
விளக்கவுரை :
2854. மதியும் சுடரும் வழி காணல் உறாப்
பொதியும் அகிலின் புகையும் கொடியும்
நிதியின் கிழவன் இனிதா உறையும்
பதி பொன் நகரின் படி கொண்டதுவே
விளக்கவுரை :
2855. ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
காம வல்லி கிடந்தன போன்றவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2851 - 2855 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books