சீவக சிந்தாமணி 2861 - 2865 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2861 - 2865 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2861. விரும்பு பொன் தட்டிடை வெள்ளிக் கிண்ணம் ஆர்ந்து
இருந்தன போன்று இள அன்னப் பார்ப்பு இனம்
பொருந்து பொன் தாமரை ஒடுங்கிப் புக்கு ஒளித்து
இருந்த கண்டான் இளங் கோக்கள் நம்பியே

விளக்கவுரை :

2862. உரிமையுள் பட்டிருந்து ஒளிக்கின் றார்களைப்
பெரும நீ கொணர்க எனப் பேசு காஞ்சுகி
ஒரு மகற்கு ஈந்தனன் கோயில் புக்கனன்
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே

விளக்கவுரை :

[ads-post]

2863. வட மலைப் பொன் அனார் மகிழ்ந்து தாமரைத்
தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே
வட முலை என நடாய் வருடிப் பால் அமுது
உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார்

விளக்கவுரை :

2864. கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன்
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே
கொண்டு ஈங்கு வம்மின் கொலை வேலவன் தன்னை என்றான்

விளக்கவுரை :

2865. படு கண் முழவும் பசும் பொன் மணி யாழும் ஏங்க
இடுகும் நுசுப்பினவர் ஆட இருந்த நம்பி
அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books