சீவக சிந்தாமணி 2926 - 2930 of 3145 பாடல்கள்
2926. நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
பெரும் பலிச் சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும்
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை வயின் தூண் தொறு ஊட்டும்
அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர்
விளக்கவுரை :
2927. அற்றவர் வருத்தம் நீக்கி ஆர் உயிர் கொண்டு நிற்கும்
துற்ற அவிழ் ஈதல் செம் பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும்
முற்று உயிர் ஓம்பித் தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2928. மாலைப் பந்தும் மாலையும் ஏந்தி மது வார் பூஞ்
சோலை மஞ்ஞைச் சூழ் வளையார் தோள் விளையாடி
ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணாச்
சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே
விளக்கவுரை :
2929. மாசித் திங்கள் மாசின சின்னத் துணி முள்ளின்
ஊசித் துன்னம் மூசிய ஆடை உடை ஆகப்
பேசிப் பாவாய் பிச்சை எனக் கை அகல் ஏந்திக்
கூசிக் கூசி நிற்பர் கொடுத்து உண்டு அறியாதார்
விளக்கவுரை :
2930. காட்டு அகத்து ஒரு மகன் துரக்கும் மாக்கலை
ஓட்டு உடைத் தாம் எனின் உய்யும் நங்களை
ஆட்டியிட்டு ஆர் உயிர் அளைந்து கூற்றுவன்
ஈட்டிய விளை மதுப் போல உண்ணுமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2926 - 2930 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books