சீவக சிந்தாமணி 2981 - 2985 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2981 - 2985 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2981. நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானைத்
தேர் முழங்கு தானைத் திருமாலின் முன் துறப்பான்
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே

விளக்கவுரை :

துறவு வலி உறுத்தல்

2982. கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த கூர் இலை
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்

விளக்கவுரை :

[ads-post]

2983. நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
பற்றொடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்

விளக்கவுரை :

2984. உப்பு இலிப் புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏகக்
கைப் பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
மைப் பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
இப் பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்மின் என்றான்

விளக்கவுரை :

2985. கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர்த் தறுகண் ஆளி
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
பல் வினை வெள்ளம் நீந்திப் பகா இன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books