சீவக சிந்தாமணி 2716 - 2720 of 3145 பாடல்கள்
2716. கொழு மடல் குமரி வாழைத் துகில் சுருள் கொண்டு தோன்றச்
செழுமலர்க் காம வல்லி செருக் கயல் சிற்பம் ஆகக்
கழுமணிச் செம் பொன் ஆழிக் கைவிரல் உகிரின் கிள்ளி
விழு முலைச் சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்
விளக்கவுரை :
2717. கடைதயிர்க் குரல வேங்கை கண் உறச் சென்று நண்ணி
மிடை மயிர்க் கவரி நல் ஆன் கன்று உணக் கண்டு நிற்பார்
புடை திரண்டு எழுந்த பொம்மல் வனமுலை பொறுக்கல் ஆற்றார்
நடை மெலிந்து இகலி அன்ன நல் நடை நயந்து நிற்பார்
விளக்கவுரை :
[ads-post]
2718. எம் வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ்
வெம்மையின் விழையப் பண்ணி எஃகு நுண் செவிகள் வீழச்
செம்மையின் கனிந்த காமத் தூது விட்டு ஓத முத்தம்
வெம் முலை மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே
விளக்கவுரை :
2719. பிடி மருள் நடையினார் தம் பெருங் கவின் குழையப் புல்லித்
தொடை மலர்க் கண்ணி சேர்த்திச் சுரும்பு உண மலர்ந்த மாலை
உடை மது ஒழுகச் சூட்டி உருவத் தார் குழைய வைகிக்
கடிமலர் மகளிர் ஒத்தார் காவலன் களி வண்டு ஒத்தான்
விளக்கவுரை :
2720. இழைந்தவர் நலத்தை எய்தி இனம் திரி ஏறு போலக்
குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் பெயர்ந்து போகி
வழிந்து தேன் வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான்
விழைந்த அக் கடுவன் ஆங்கு ஓர் மந்தியை விளித்தது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2716 - 2720 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books