சீவக சிந்தாமணி 2846 - 2850 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2846 - 2850 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2846. கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல்
நீடிய வினை மரம் நிரைத்துச் சுட்டிட
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே

விளக்கவுரை :

2847. கடை இலா அறிவொடு காட்சி வீரியம்
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும்
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
அடைதலான் மேல் உலகு அறியப் பட்டதே

விளக்கவுரை :

[ads-post]

பிறவிகள் அறவுரை

2848. மாதவன் எனப் பெயர் வரையின் அவ்வரை
ஏதம் இல் எயிறு அணி பவள வாய்த் தொடுத்து
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான்

விளக்கவுரை :

2849. எல்லை இல் அறவுரை இனிய கேட்ட பின்
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும்
வல்லையே பணிமின் அம் அடிகள் என்றனன்
மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான்

விளக்கவுரை :

2850. கதிர் விடு திருமணி அம் கைக் கொண்டது ஒத்து
எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும்
அதிர்வு அறு தவ விளக்கு எறிப்பக் கண்டவன்
பதர் அறு திருமொழி பணிக்கும் என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books