சீவக சிந்தாமணி 3036 - 3040 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3036 - 3040 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3036. ஏவா இருந்த அடிகள் இவர் வாய்ச் சொல்
கோவா மணி கொழித்துக் கொண்டாலே போலுமால்
சாவா கிடந்தார் செவிச் சார்த்தின் அப்பொழுதே
மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே

விளக்கவுரை :

3037. தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்துச்
சூளா மணியாய்ச் சுடர இருந்தானை
வாள் ஆர்முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும்
தாள் ஆர ஏத்திப் போய்த் தன் கோயில் புக்கானே

விளக்கவுரை :

[ads-post]

3038. புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர்
தொக்காலே போலும் தன் தேவிக் குழாம் சூழ
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம்பால்
தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே

விளக்கவுரை :

3039. பற்று ஆர்வம் செற்றம் முதலாகப் பாம்பு உரி போல்
முற்றத் துறந்து முனிகளாய் எல்லாரும்
உற்று உயிர்க்குத் தீம்பால் சுரந்து ஓம்பி உள்ளத்து
மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே

விளக்கவுரை :

3040. கோமான் அடி சாரக் குஞ்சரங்கள் செல்வன போல்
பூ மாண் திருக் கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தித்
தாம் ஆர்ந்த சீலக் கடல் ஆடிச் சங்கு இனத்துள்
தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books