சீவக சிந்தாமணி 2856 - 2860 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2856 - 2860 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2856. பைங் கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான்
சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி
ஐங் கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம்
தங்கிய கேள்வியாற்குத் தையலார்ச் சேர்த்தினாரே

விளக்கவுரை :

2857. இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகிக்
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
விளை மதுத் தேறல் மாந்தி வெற்றிப் போர் அநங்கன் ஆனான்

விளக்கவுரை :

[ads-post]

2858. இலங்கு அரி பரந்த வாள் கண் இளையவர் புலவி நீங்கச்
சிலம்பு எனும் வண்டு பாடச் சீறடிப் போது புல்லி
அலங்கல் வாய்ச் சென்னி சேர்த்தி அரிமதர் மழைக் கண் பில்க
நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாம் உறக் கழிக்கும் மாதோ

விளக்கவுரை :

2859. மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
பங்கயப் பனித் தடம் சேரப் பார்ப்பு அனம்
செங் கயல் பேர் இனம் இரியச் செவ்வனே
பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே

விளக்கவுரை :

2860. வேய்ந்த வெண் தாமரைக் கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
ஆய்ந்த முகில் ஆடைத் திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல்
தோய்ந்த தன் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை
பாய்ந்து துகைப்பக் கிழிந்த கூழைப் பனித் தாமரை சூழ் பகல் கோயிலே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books