சீவக சிந்தாமணி 3096 - 3100 of 3145 பாடல்கள்
3096. நல்லனவே என நாடி ஓர் புடை
அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலைத் தாய் பயந்தார் அவர்
சொல்லுவ நீ சுகதா உரையாயே
விளக்கவுரை :
3097. மதி அறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி
நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லாத்
துதி அறையாத் தொழுதார் மலர் சிந்தா
விதி அறியும் படி வீரனை மாதோ
விளக்கவுரை :
[ads-post]
3098. தீ வினைக் குழவி செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள்
வீ வினை இன்றிக் காம முலை உண்டு வளர்ந்து வீங்கித்
தா வினை இன்றி வெம் நோய்க் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நாக் கோதையர்க் கூறல் உண்டே
விளக்கவுரை :
3099. நல் வினைக் குழவி நல் நீர்த் தயா எனும் செவிலி நாளும்
புல்லிக் கொண்டு எடுப்பப் பொம் என் மணி முலை கவர்ந்து வீங்கிச்
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே
விளக்கவுரை :
3100. மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
இணை மலர்ச் சேவடி கொடுத்த என்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3096 - 3100 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books