சீவக சிந்தாமணி 3111 - 3115 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3111 - 3115 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3111. மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
பிணி உயிர் இறுதியாப் பேசினேன் இனித்
துணிமினம் எனத் தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்

விளக்கவுரை :

3112. விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
தௌ நிலாத் திரு மதி சொரியத் தே மலர்
மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே

விளக்கவுரை :

[ads-post]

3113. பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
வான் இடை முழக்கின் கூறி வால் அற அமிழதம் ஊட்டித்
தேன் உடை மலர்கள் சிந்தித் திசை தொழச் சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ளச் சாமி நாள் சார்ந்தது அன்றே

விளக்கவுரை :

3114. உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு உய்யப் போகல் வேண்டித்
தொழு வித்தி அறத்தை வைத்துத் துளங்கு இமில் ஏறு சேர்ந்த
குழவித் தண் திங்கள் அன்ன இருக்கையன் ஆகிக் கோமான்
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே

விளக்கவுரை :

3115. துந்துபி கறங்க ஆர்த்துத் துகில் கொடி நுடங்க ஏந்தி
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டிக் கிளர் முடி உறுத்தினரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books