சீவக சிந்தாமணி 3051 - 3055 of 3145 பாடல்கள்
3051. கனை கடல் கவரச் செல்லும் கண மழைத் தொகுதி போலும்
நனை மலர்ப் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றிப்
புனை முடி மன்னர் ஈண்டிப் பொன் எயில் புறத்து விட்டார்
வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே
விளக்கவுரை :
3052. வண்டு சூழ் பூப்பலி சுமந்து தான் வலம்
கொண்டு சூழ்ந்து எழுமுறை இறைஞ்சிக் கோன் அடி
எண்திசை அவர்களும் மருள ஏத்தினான்
வெண் திரைப் புணரி சூழ் வேலி வேந்தனே
விளக்கவுரை :
[ads-post]
3053. பகல் வளர் பவழச் செந்தீப் பருதி முன் பட்டதே போல்
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
முகில் கிழி மதியம் போலும் முனிக்குழாம் நோக்கினானே
விளக்கவுரை :
3054. கண் வெறி போக ஆங்கு ஓர் கடுந் தவன் உருவம் நோக்கி
ஒண் நெறி ஒருவிக் கோமான் ஒளி திரண்டு இருந்ததாம் கொல்
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே
விளக்கவுரை :
3055. விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
இளங் கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம்
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
துளங்கினன் எனத் தொழுது இறைஞ்சினான் அரோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3051 - 3055 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books