சீவக சிந்தாமணி 3126 - 3130 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3126 - 3130 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3126. தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும்
குவளைக் கண் மலர்க் கோலம் வாழ்த்தியும்
இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனாத்
திவளத் தே மலர்க் கண்ணி சேர்த்தியும்

விளக்கவுரை :

3127. பல் மணிக் கதிர்ப் பரவை மேகலை
மின் அணிந்து உகத் திருத்தி வெம் முலைப்
பொன் அணிந்து பூஞ் சுண்ணம் தைவர
நல் மணிக் குழை இரண்டும் நக்கவே

விளக்கவுரை :

[ads-post]

3128. செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
எய்தி யாவையும் உணர்க என்ப போல்
மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
நைய நின்று எலாம் நாண நக்கவே

விளக்கவுரை :

3129. செல்வக் கிண் கிணி சிலம்பத் தேன் சொரி
முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந் நலம்
புல்லிப் பூண்ட தார் புரள மேகலை
அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே

விளக்கவுரை :

3130. இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினைக் கை செய்து ஐ என
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books