சீவக சிந்தாமணி 3041 - 3045 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3041 - 3045 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

சேணிகன் வரவு

3041. மட்டு அலர் வன மலர்ப் பிண்டி வாமனார்
விட்டு அலர் தாமரைப் பாதம் வீங்கு இருள்
அட்டு அலர் பருதியின் அளிக்கச் செல்லும் நாள்
பட்டது ஓர் பொருளின் இனிப் பழிச்சு கின்றதே

விளக்கவுரை :

3042. கயல் இனம் உகளிப் பாய முல்லை அம் பொதும்பில் காமர்
புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பிக் குன்றத்து
அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
வயல் வளர் கரும்பில் பாயும் மகத நாடு என்பது உண்டே

விளக்கவுரை :

[ads-post]

3043. இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்ச்
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதிப்
பெருங் கடி நகரம் பேசின் இராசமா கிருகம் என்பர்
அருங் கடி அமரர் கோமான் அணிநகர் ஆயது ஒன்றே

விளக்கவுரை :

3044. எரி மிடைந்த அனைய மாலை இன மணி திருவில் வீசும்
திருமுடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
அருமுடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே

விளக்கவுரை :

3045. பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
மின் ஆர் மணிப் பூணவன் மேவி விண்காறும் நாறும்
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
மன் ஆர வாய்க் கொண்டு உமிழ்ந்தான் மணிமாலை வேலோன்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books