சீவக சிந்தாமணி 3121 - 3125 of 3145 பாடல்கள்
3121. ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர் களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்
விளக்கவுரை :
3122. காம வல்லிகள் கலந்து புல்லிய
பூ மென் கற்பகப் பொன் மரங்கள் போல்
தாம வார் குழல் தையலார் முலை
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்
விளக்கவுரை :
[ads-post]
3123. கலவி ஆகிய காமத்தின் பயன்
புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே
விளக்கவுரை :
3124. பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் எனக்
காவிக் கண் கடை இடுகக் கால் சிலம்பு
ஆவித்து ஆர்த்தன அம்மென் குஞ்சியே
விளக்கவுரை :
3125. நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூங்
குஞ்சி ஏற்றது குறிக் கொள் நீ எனாப்
பஞ்சின் மெல்லடிப் பாவை பூ நுதால்
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 3121 - 3125 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books